Friday, February 12, 2010

"காதலும் கடவுளும் ஒண்ணு தான் "


பிப்ரவரி நாவே நமக்கு டக்குனு நியாபகம் வருவது “ காதலர் தினம் “ தான். காதல்கர வார்த்தைய கேட்டாவே நமக்கு ஒவ்வருதருகுளையும் இனம்புரியாத ஒரு ஆனந்தம். பிப்ரவரி 14  பலர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள அமையுது (குறிப்பா கல்லூரி மாணவர்களுக்கு)
மச்சா நான் இன்னைக்கு என் ஆளுகிட்ட எப்படியாவது என் காதல சொல்லியே ஆகணும் நுன் கிப்டு கிரீட்டிங் கார்டுனு கெளம்பற இளைகர்களை பரவலாக பார்க்கலாம். 
காதல் sms,Greeting Card,Gifts, கவிதைன்னு உலகமே உச்சாகம இருக்கும். காதல்கறது ரொம்ப புனிதமான விஷயம். ஆனா இந்த வார்த்தைய நம் சமூகத்துல பல இடங்களில் தப்பா உபயோகிப்பதை , தப்பா புரிந்துவைதிபதையும் பார்க்கும்போது கோபப்படுவதா இல்லை இவர்களின் அறியாமையை நினைத்து வருதப்படுவதான்னு தெரியல.
 இன்னைக்கு பல நாளிதழிலும் வரும் Headlines பார்த்திகன
“ காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை “
“ கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்”
“ காதலை ஏற்க மறுத்தால் குத்தி கொலை. “
இது எப்படி காதல் ஆகும்
இப்படி மீடியாகள் அவர்கள் business க்காக காதல் கர விஷயத தப்பா உருவம் கொடுத்து வச்சுருக்காங்க.
இதேபோல் போன வாரம் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்று பார்த்து கொண்டிருந்தேன் .அப்போ அங்கே பங்கேற்க வந்த ஒருவர் சொன்னார் “நான் ஒரு பொண்ணை உயிர்க்கு உயிராய் காதலித்தேன் ஆனால் அவள் மறுத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியின் முலமாக பெரியாள வருவேன்.அத பார்த்து அவள் என்னை miss பண்ணிட்டோம் என்று வருத்தப்படவேண்டும் என்று கூறினார்.” காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் அவள் கஷ்டப்படனும் நினைக்கறது காதல் ஆகுமா ? 
நாம நம்ம சந்தோஷத்துக்கா காதலிக்க ஆரம்பிக்கிறோம் ஆனா பல பேர்துகு துக்கம்தான் மிஞ்சுது.இப்படி காதல்ன  என்னனே தெரியாம பல பேர் காதல் தொல்வினு சொல்லி TASMAC முன்னாடி நின்னு  தன் வாழ்க்கையையும் சந்தோசத்தையும் தொளசுக்கிட்டு இருக்காங்க.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் மீது வரும் அன்புக்கு பெயர் தான் காதல்.
ஆனா இப்போ தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்தால் தான் நமக்கு ஒருவர் மீது காதலே வருது,
இவள் /இவன் தான் என் வாழ்க்கை . இவள் /இவன் தான் என் சந்தோஷம்.இவள் /இவன் இல்லாமல் என்னால் வாழமுடியாது. அப்படிக்கறது காதல் இல்லை. அதற்கு பேரு ஆசை.
நம்ம வாழ்க்கை,சந்தோஷம் எல்லாம் நம்ம கைளதான் இருக்கு.என்னைக்கு அத அடுத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறோம் மோ அன்றுதான் ஏமாற்றம் வருது.
நம்ம நாட்டுல காதல் திருமணம் எண்ணிக்கை உயர்த்து கொண்டு இருந்ததாலும் மறுபுறம்
Divorce rate டும் உயர்த்துகொண்டு வருகிறது. காதலிக்கும் போது விட்டுகொடுத்து வாழலும் காதலர்கள் கணவன் மனைவியாக மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததும் பல கருத்துவேறுபாடுகள் ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை என்பது நம் life share பண்ணிக்கற விஷயமா இருக்கணும். எப்ப கணவன் / மனைவி தம் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் கருவியாக பார்க்கும் போதுதான் மணவாழ்க்கையில் விரிசல் வருகிறது.
காதலர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது தான் .காதலிங்க தப்பில்லை ஆனா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பா இருக்கணும்.
கடவுள் க்கு உருவம் கிடையாது . விருப்பு ,வெறுப்பு ,கோபம் ,எதிர்பார்ப்பு இல்லாத அன்பான நிலைதான் நாம் கடவுள் நிலை.
அது போல தான் காதலும். காதலும் கடவுளும் ஒண்ணு தான்.
அனைவருக்கும் என் காதலர் தின நல வாழ்த்துக்கள்.

Sunday, January 31, 2010

நம் தேசிய விலங்கை அழிவிலிருந்து காப்போம்

 நம் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று சமிபத்திய புலிகள் கணக்கெடுப்பு கூறுகிறது . இந்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இன்னும்  1411 புலிகள் தான் உள்ளது . புலிகளின் எலும்புகள் மற்றும் உறுப்புகள் மருத்துகள் தயாரிப்புகளுக்கு உபயோகபடுவதால் , புலிகள் பெருமளவில் வேட்டையாடப்பட்டு பல நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடதப்படிகிறது. 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3508 புலிகள் இருந்தது. இந்தாண்டு 1411 ஆக உள்ளது .

       
இந்நிலைமை நீடித்தால் நம் அடுத்து வரும் சந்ததினர்கள் புலிகளை புத்தககளிலும் தொலைகாட்சிகளில் லும் தான் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலைமை வந்துவிடும்.
                      பணம் , தொழில்நுட்பம்,விஞ்ஞானம்  என்று சொல்லி நம் நாகரீகம் ,இயற்கை வளங்கள் , நம் உடல்நலம் என்று அனைத்தையும் இழந்து கொண்டிருக்கும் நாம் நம் தேசிய விலங்கையும் விட்டுவைக்கவில்லை.




                      இதை பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச்சொல்லி புலிகளின் அழிவை தடுக்க கரம்கொடுகள் . மேலும் விவரங்களுக்கு பின்வரும் link  கை விசிட் செய்யுங்கள் .

http://www.saveourtigers.com/
               

Tamilish

Sunday, January 10, 2010

அத்திப்பழம் பலன்கள்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது


1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,


2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,


3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.


4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.


5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.


விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.